ADVERTISEMENT
கேரளாவின் வயநாடு காங்., - எம்.பி., ராகுல்: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக, மோடி அரசின், 'சர்ஜிகல் ஸ்டிரைக்' குறித்து, காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் சந்தேகம் எழுப்பியது அபத்தமானது; அதை நான் ஏற்கவில்லை. நம் வீரர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை.
டவுட் தனபாலு: உங்களை அரசியல்ல, 'பப்பு' என பா.ஜ.,வினர் கிண்டல் அடிச்சிட்டு இருந்தாங்க... 'நான் அப்படி இல்லை... எனக்கும் பொறுப்புணர்வு இருக்குது' என்பதை, 'டவுட்'டே இல்லாம உணர்த்திட்டீங்க... நம்ம ராணுவ வீரர்கள் சார்பா உங்களுக்கு ஒரு, 'சல்யூட்!'
பத்திரிகை செய்தி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தல் பணிக்குழுவில், செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில், 16 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட மொத்தம், 61 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
டவுட் தனபாலு: தமிழக காங்., கட்சியில இருக்கிற ஒட்டுமொத்த ஆட்களையும், தேர்தல் பணிக்குழுவுல போட்டுட்டாங்களே... களத்துல இறங்கி பணியாற்ற, தி.மு.க., தொண்டர்களை மட்டும் நம்பிஇருக்காங்களோ என்ற, 'டவுட்' எழுதே!

பத்திரிகை செய்தி: தி.மு.க., பொதுக் கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட சென்ற, பால்வளத் துறை அமைச்சர் நாசர் அமர்வதற்கு, தொண்டர்கள் நாற்காலி எடுத்து வர தாமதமானது. இதனால், அதிருப்தி அடைந்த அமைச்சர் நாசர், கீழே கிடந்த கல்லை எடுத்து, கட்சித் தொண்டர்கள் மீது வீசினார்.
டவுட் தனபாலு: பழைய, 'பிளாக் அண்டு ஒயிட்' சினிமாக்கள்ல, சோடா பாட்டில்களை வீசியபடியும், சைக்கிள் செயினை சுத்தியபடியும் அரசியல்வாதிகள் வலம் வர்ற காட்சி தான், இப்ப ஞாபகத்துக்கு வருது... சொந்த கட்சியினர் மேலேயே கல் வீசுற அமைச்சரிடம், எதிர்க்கட்சியினர் சிக்குனா என்னாவாங்கன்னு, 'டவுட்' இல்லை... பயமாவே இருக்குது!
வாசகர் கருத்து (13)
IDHE PAPPU CHINA NIRAYA NILAMGALAI ABAGARITHU VITTADHU ENA MODIYAI KEVALA PADUTHA URUTTINAARIDHU ENNA DHIDIR PONGAL POLA DHIDIR RAANUVA PAASAM.
அன்றைக்கு காங்கிரஸ் காரனுங்க விமர்சித்த போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த பப்புவுக்கு தேர்தல் ஞானோதயம் வந்துவிட்டது போலும்.
பப்பு இப்போது எது சொன்னாலும் செய்து காட்டினாலும் ஒருவரும் அவரை நம்ப மாட்டார்கள்.
இப்படி ராணுவத்தைப்பற்றி பேசியவாறு கட்சியில் இருந்து அல்லவா நீக்கி இருக்கவேண்டும்? உலகம் தெரியாத பாப்பு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
appo முன்பு சொன்னது நாரா வாயா...மிஸ்டர் பப்பு???