ஓட்டலில் தீ விபத்து
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் முன்பு இருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் நுழைவு வாயில் முன்பு இஸ்மாயில் என்பவர் ஓட்டல் நடத்திவருகின்றார். இந்நிலையில் நேற்று பகல் 1.30 மணியளவில் ஓட்டல் சமயலறையின் அடுப்பின் அருகே இருந்த விறகுகள் திடீரென பிடித்து எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் முன்பு ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!