ADVERTISEMENT
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள்,பள்ளி, கல்லுாரிகளில் தேசிய வாக்காளர் தின விழா உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடந்தது.
ராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார்.
கேணிக்கரை ரோடு, வழிவிடு முருகன் கோயில், வண்டிக்கார தெரு, பஸ் ஸ்டாண்ட் ரோடு என நகரில் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். ஆர்.டி.ஒ., கோபு, தாசில்தார்கள் ரமேஸ்குமார், ரவிச்சந்திரன், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., ராஜா முன்னிலையில் அலுவலர்கள் வாக்காளர்தின உறுதி மொழி எடுத்தனர். ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் முதல்வர் ஆனந்த் முன்னிலையில் பேராசிரியர்கள், மாணவர்கள் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்தனர்.
* முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுஊர்வலம் நடந்தது. தாசில்தார் சிவக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ஷாஜகான், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் முருகேஷ் முன்னிலை வகித்தனர்.
தாலுகா அலுவலகத்தில் துவங்கி காந்தி சிலை, தேரிருவேலி முக்குரோடு, பஸ் ஸ்டாண்ட் வரை பள்ளி மாணவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின்பு பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மாள் வழங்கினார்.
தலைமைஆசிரியர் முகமது சுல்தான் அலாவுதீன், உதவி தலைமைஆசிரியர் ஜாகிர் உசேன் உட்பட வருவாய்த்துறையினர், ஆசிரியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
* தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆர். எஸ்.மங்கலத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நடந்தது. தாசில்தார் சிலோன்மணி தலைமை வகித்தார். துணை தாசில்தார் ஜெயசித்ரா, மண்டல துணை தாசில்தார் சுவாமிநாதன், வி.ஏ.ஓ., பிரகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்ஊர்வலமாக சென்றனர். முன்னதாக பள்ளியில் தாசில்தார் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியர் ராமகிருஷ்ணன் வாசித்தார். தலைமை ஆசிரியர் அண்ணாதுரை உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் இருந்து ஏர்வாடி முக்கு ரோடு வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கீழக்கரை தாசில்தார் சரவணன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் பழனிகுமார் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம், முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பி.ஆர்.ஓ., நஜிமுதீன் உட்பட கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து (3)
பொங்கல் பண்டிகைக்கு பரிசு கொடுப்பதிலும் முதலில் கொடுப்பது இஸ்லாமிய பெண்ணுக்கு . மற்ற இந்துமத பண்டிகைக்கு அரசூ கொடுக்கும் சலுகைகளும் இஸ்லாமியருக்கே . இதுபோன்ற விழாக்களிலும் இஸ்லாமியருக்கே . இந்த விடியாத தீயமுக அரசு செய்ல்படுவது சிறுபான்மையிரினருக்காக மட்டுமே . பாதிரி ஜார்ஜ் பொன்னையா சொன்ன மாதிரி ஓட்டுப்பிச்சை போடுபவர்களுக்கு மட்டுமே இந்த தீயமுக அரசு செயல்படுகிறது .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்