108 ஆம்புலன்சில் பணிபுரிய நாளை வேலை வாய்ப்பு முகாம்
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை 27ம் தேதி 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் அறிக்கை;
108 அவசரகால ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நாளை 27ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.
மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்.,-ஏ.என்.எம்.,-டி.எம்.எல்.டி.,(பிளஸ் 2விற்கு பின் இரண்டு ஆண்டுகள் படிப்பு) அல்லது லைஃப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்.சி., உயிரியல், தாவரவியல் , பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி) படித்திருக்க வேண்டும்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு 15,435 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். டிரைவர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருபாலாருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். பேட்ஜ் உரிமம் எடுத்து இரண்டு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 15, 235 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்
அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044 -28888075, 044 -28888077, 9154251239, 9154251229, 7397724836, 7550030685 ஆகிய எண்களுக்கு காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!