மாவட்டத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம்-மாவட்டத்தில் கால்நடை பராமரித்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆறு இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. காணை ஒன்றியம் அடங்குணம், கோலியனுார் ஒன்றியம் குடுமியாங்குப்பம், வானுார் ஒன்றியம் பூத்துறை, விக்கிரவாண்டி ஒன்றியம் எசாலம், மேல்மலையனுார் ஒன்றியம் சாத்தநந்தல், வல்லம் ஒன்றியம் ஏதாநெமிலி ஆகிய ஊராட்சிகளில் இம்முகாம் நடந்தது.
இதில், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கப்பணி, ஆண்மை நீக்கம், தாது உப்புக்கலவை வழங்குதல், மலடுநீக்க சிகிச்சை, கால்நடை பராமரிப்பு, நோய்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!