குட்கா விற்றவர் கைது
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டியில் குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஞானவேல்,32: பங்க் கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தபோது குட்கா விற்றது தெரியவந்தது.
போலீசார் கடையிலிருந்து 285 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து வியாபாரி ஞானவேலை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!