ADVERTISEMENT
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஐந்திணை மரபணு பூங்காவில் பல்வேறு வகை மலர் செடிகள், பழக்கன்றுகள், நிழல் தரும் மரக்கன்றுகள் நர்சரி பண்ணையில் வளர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐந்திணை பூங்காவின் ஒரு பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில் பாதுகாப்பு வலைகள் அமைத்து அதற்குள் இயற்கை உரம் பயன்படுத்தி மரக்கன்றுகளை பணியாளர்கள் வளர்த்து வருகின்றனர்.
இங்கு வளர்க்கப்படும் மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மலர் செடிகள் ஒன்று ரூ.30க்கு விற்கின்றனர். பூங்கா வரும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மலர் செடிகளை வீடுகளுக்கு வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!