ரயில் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் கிராஸிங் ஸ்டேஷன் ஆக மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சி திருவனந்தபுரம் திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் ஜன., 26, 27, பிப்., 4 முதல் 9 வரை, பிப்., 14 முதல் 17 வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் ஜன. 27 ல் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய புனலுார் விரைவு ரயில் (16729) மற்றும் ஜன., 28 ல் புனலுாரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (16730) ஆகியன திருநெல்வேலி - புனலுார் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!