நம்ம ஊரு விவசாயத்தில் ஆர்வம்: அமெரிக்கர்களுக்கு தேசியக் கொடி வழங்கி வரவேற்பு
கமுதி--ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்யப்படும் மிளகாய் செடிகளை ஆய்வு செய்ய வந்த அமெரிக்காவை சேர்ந்த கெவின், கிறிஸ்டி ஆகியோரை தேசிய கொடி வழங்கி இயற்கை விவசாயி ராமர் வரவேற்றார். இந்த ஆண்டு 100 டன் மிளகாய் ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
![Latest Tamil News]()
கோரப்பள்ளத்தில் ராமர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை முறையில் மிளகாய், வாழை, சிறுதானியங்கள் விவசாயம் செய்து வருகிறார். 5 ஆண்டுகளாக இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாயை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை புரிந்துஉள்ளார்.
மேலும் பல நாடுகளுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்துள்ளார். இந்த ஆண்டு மிளகாய் சாகுபடி துவங்குவதற்கு முன்பே அமெரிக்காவில் ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நேற்று சஸ் அக்ரி டெவலப்மென்ட் (பி.லிட்) கம்பெனி உதவியுடன் அமெரிக்காவை சேர்ந்த கெவின், கிறிஸ்டி கோரப்பள்ளம் கிராமத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் மிளகாய், வாழை உள்ளிட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்ய வந்தனர்.
தேசிய கொடி கொடுத்து அவர்களை ராமர் வரவேற்றார். பின், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய், வாழை பயிர்கள் வளர்ச்சி குறித்து விளக்கினார். பயன்படுத்தப்படும் இயற்கை உரம், சாகுபடி முறை, சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல் குறித்தும் விளக்கினார்.
![Latest Tamil News]()
கெவின் கூறுகையில், இந்தியாவில் நேரடியாக இயற்கை விவசாயம் குறித்து ஆய்வு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு 100 டன் மிளகாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கூடுதலாக ஒப்பந்தம் செய்யப்படும், என்றார்.
மிகவும் சிறப்பாக சாகுபடி செய்வதாக ராமருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ராமர் கூறுகையில், ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்கிறேன். இந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து நேரடியாக வந்து மிளகாய் சாகுபடி குறித்து ஆய்வு செய்து ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். நாளை(இன்று) குடியரசு தினம் என்பதால் தேசிய கொடி வழங்கி வரவேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.

வாசகர் கருத்து (4)
இயற்கை முறையில் விவசாயம் செய்து அதிக கொள்முதல் பெற்றது வரவேற்கத்தக்கது. ஆனால் உள்ளூர் மக்களுக்கு அப்படி விளைவித்த பொருட்கள் எளிதில் கிடைக்குமாட்டா. பணக்கார நாடுகளுக்கும் பணக்காரர்களுக்குமே நன்மை விளையும். எளிய வெகுஜன மக்களுக்கு ரசாயன பூச்சிக்கொள்ளி மற்றும் ரசாயன உரங்களால் விளைவித்த உணவுப் பொருட்களே சந்தையில் கிடைக்கின்றன.
100 Ton ஏற்றுமதிக்கு பிறகு அவர்களுக்கு உடனடியா அல்லது தாமதமோ ஆனால் கட்டாய மரபணு சூழ்ச்சியில் இவர்கள் தள்ளப்பட்டுட்ட அடிமையாவார்கள். இன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சில பழங்களில் வித்தைகளே கிடையாது.
இவரை தொடர்பு கொள்ள முடியுமா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சபாஷ்