ADVERTISEMENT
பழநி--பழநி மலை முருகன் கோயில் படிப்பாதை சன்னதிகள், உப தெய்வ சன்னதிகளுக்கு இன்று காலை 9:50 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
இதில் பக்தர்கள் கட்டுப்பாடு இன்றி அனுமதிக்கப்பட உள்ளனர்.
காலை 5:30 மணிக்கு படிப்பாதை பாத விநாயகர் கோயில்முதலான உப தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி திருக்குட ஞானத் திரு உலா நடைபெறும். காலை 9:50 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் கிரி வீதியில் உள்ள மயில்கள், பாத விநாயகர் கோயில், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலர், சண்டிகாதேவி, விநாயகர், இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட உப தெய்வ சன்னதி கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கட்டுப்பாடின்றி பங்கேற்கலாம்.
நாளை (ஜன. 27) கோயில் மூலவர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு நான்காம் கால வேள்வி துவங்கியது. ஐந்தாம் கால வேள்வி மாலை 5:30 மணிக்கு நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!