வங்கி சேவைகள் 5 நாட்கள் முடக்கம்
சென்னை--பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.30 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். விடுமுறை நாட்களையும் சேர்ந்து வங்கி பணிகள் ஐந்து நாட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 30, 31ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுதவிர குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று விடுமுறை. நாளை மட்டும் வங்கி உண்டு.
அடுத்த நாள் நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை; அடுத்து ஞாயிறு அன்றும் வழக்கமான விடுமுறை.
வரும் 27ம் தேதி தவிர நாளை முதல் ஐந்து நாட்கள் வங்கி பணிகள் செயல்படாது. பல லட்சம் ரூபாய்க்கான காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஏ.டி.எம்.களில் போதிய பணம் இருப்பு வைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை சமரச பேச்சு நடக்க உள்ளது.
இதில் உடன்பாடு ஏற்பட்டால் ஜன. 30, 31ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தை வங்கி ஊழியர்கள் வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது.

வாசகர் கருத்து (8)
மத்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியையே திவால் ஆக்கிட்டாங்க ,இதில் மற்ற வங்கிகள் எல்லாம் கால் தூசிக்குச் சமானம்...
அவர்கள் நியாயமான கோரிக்கைகளை ஆண்டு கணக்கில் நிறைவேற்றாமல் இருப்பதால் தான் வேலை நிறுத்தம்
வரும் காலத்தில் வங்கிகள் தனியார் துறையில் தான் துவங்க வேண்டும். அப்போதுதான் வேலை நிறுத்த பூச்சாண்டிகள் ஒழியும். Also hire and fire, efficiency assessment and noquota in promotion in PSU banks must be made future norms.
ஐ டோண்ட் கேர்... என் கணக்கில் போடப்பட்ட 15 லட்சம் எப்பவோ செலவழிச்சாச்சு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அப்புவுக்கு அந்தப் பதினைந்து லட்சம் பற்றியே எப்பவும் கவலை ,இந்தியாவிலும் , வெளிநாட்டிலும் கறுப்புப் பணமே இல்லை ,அப்புறம் எப்படிக் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவது ???கறுப்புப் பணம் இருந்தால் தானே அந்தப் பதினைந்து லட்சம் அவரவர் வங்கிக்கணக்கில் போட்டு வரவு வைக்க முடியும் ???போங்க ,போய் நல்லாப் படுத்துத் தூங்குங்க