புதுடில்லி: மறைந்த சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா, பிரபல தபலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உட்பட ஆறு பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராம், தொழிலதிபர் 'இன்போசிஸ்' நாராயணசாமியின் மனைவி சுதா மூர்த்தி உட்பட, ஒன்பது பேர் பத்ம பூஷண் விருது பெற உள்ளனர். சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் உட்பட நான்கு தமிழர்களுடன், ௯௧ பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் - தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி இந்தாண்டு, ஆறு பேருக்கு பத்ம விபூஷண், ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 19 பேர் பெண்கள், இரண்டு பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஏழு பேருக்கு மறைவுக்குப் பின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஜோடிகளுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச், ஏப்., மாதங்களில் நடைபெறும் விழாக்களில், இந்த விருதுகளை ஜனாதிபதி வழங்குவார்.
கடந்தாண்டு உயிரிழந்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா, பிரபல தபலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடகி வாணி ஜெயராம், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
தொழிலதிபர் இன்போசிஸ் நாராயணசாமியின் மனைவி சுதா மூர்த்தி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள, ஆர்.ஆர்.ஆர்., படத்தில் இடம்பெற்றுள்ள, 'நாட்டு... நாட்டு...' பாடலுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி உட்பட, 91 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த கலைப் பிரிவில் கல்யாண சுந்தரம் பிள்ளை, சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம், மருத்துவத் துறையில் டாக்டர் கோபால்சாமி வேலுச்சாமி, பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஜோடியாக பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் நளினி பார்த்தசாரதி, மருத்துவத் துறை சேவைக்கான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

வாசகர் கருத்து (9)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
...படு ஆபாச சினிமா நடிகர் நடிகை பின்னால் அலையும் அநாகரிக ஆபாச பிக் பாஸ் பார்க்கும் திராவிடனுக்கு இவர் யார் என்ன செய்தார் என்று தெரியுமா ??....சமூகத்தில் எந்த அடையாளமும் விளம்பரம் இல்லாமல் மக்கள் பணி செய்வோரை அங்கீகரித்து பத்மஸ்ரீ விருதுகள் வழங்குவது மோடி அரசே ...திராவிடத்தை வெல்லும் நாளே தமிழரின் விடுதலை நாள்....
அனைவரையும் உள்ளடக்கியது என்பது இதுதான் - தீம்கா போல எல்லா அவலுமே குடுப்பத்துக்கு - உமி மற்றவர்களுக்கு என்பது அல்ல...
15 லட்சம் போட முடியலஒன்னாலும், ரெண்டு கோடி வேலை குடுக்கலேன்னாலும் எல்லோருக்கும் பத்ம விருதுகள் குடுக்க முடியுது.
திராவிட மாடல் கூட்டத்துக்கு ஒண்ணுமே இல்லைனாலும் அடுத்தவனை குத்தம் சொல்ல தெரியுது
ஆத்து நெறைய தண்ணி போனாலும் குக்கல் "லிக்கி" தான் குடிக்குமாம் அது மாதிரி பதினஞ்சு லட்சமே போட்டாலும்... புத்தி இருநூறு ரூபாய்க்கு அலையுமாம் மொதல்ல பதினஞ்சு லட்சம் வாங்கறதுக்கு தகுதி வேணும்... மேல இருக்கறவனுக்கு தெரிஞ்சி இருக்கு, இங்க பதினஞ்சு லட்சம் கேக்கறவங்க இருநூறு ரூபாய்க்கு தான் வொர்த்துனு
ஒரு வெகு சாதாரண மனிதனுக்கும் பாரத் ரத்னா கிடைக்கும் என்றால் அது இந்த அரசாங்கத்தில் மட்டுமே.