தேர்தலில் கிடைக்குமா? தேர்தலில் சீட் கிடைக்குமா? உள்துறை அமைச்சர் டவுட்
மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு, இம்முறை பா.ஜ., சீட் கிடைப்பது சந்தேகம் என, தகவல்கள் கூறுகின்றன. இதனால் அவர்கள் கவலையில் உள்ளனர்.
கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கும் பா.ஜ., இம்முறை சட்டசபை தேர்தலில், இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க ஆர்வம் காண்பிக்கிறது. எனவே மூத்த எம்.எல்.ஏ.,க்களில் சிலருக்கு சீட் கிடைக்காது என, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இது குறித்து, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதாவது:
நான் ஐந்து முறை, தேர்தலில் தோற்றேன். நான்கு முறை வெற்றி பெற்றுள்ளேன். சீட் கொடுத்தால் போட்டியிடுவேன். இல்லையென்றால், கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன்.
வரும் தேர்தலில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு, கட்டுப்படுவேன். நான் தோற்ற போதும், மனம் தளரவில்லை. வெற்றி பெற்ற போதும், தலை கனத்துடன் நடக்கவில்லை. நேர்மையான முறையில் கட்சியை வளர்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -
.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!