சொத்து குவிப்பு வழக்கு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
தாவணகரே-சட்ட விரோதமாக சொத்து குவித்த பொதுப்பணித் துறை செயல் நிர்வாக பொறியாளருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 1.25 கோடி ரூபாய் அபராதம் விதித்து,மாவட்ட லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தாவணகரே, ஹரப்பனஹள்ளியின், லட்சுமிபுரா கிராமத்தில் வசிப்பவர் லஸ்கர் நாயக், 42; கொப்பாலில் பொதுப்பணித் துறையில் செயல் நிர்வாக பொறியாளராக பணியாற்றினார். சில ஆண்டுகளுக்கு முன்,இவர் சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.
அன்றைய லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் சுதீர் ஹெக்டே தலைமையிலான அதிகாரிகள், லஸ்கர் நாயக்கின் வீடு, அலுவலகங்களில் சோதனையிட்டனர். ஆவணங்களைஆய்வு செய்ததில், வருமானத்துக்கு அதிகமாக 593.64 சதவீதம் சொத்துக்கள் சேர்த்தது தெரிந்தது.
விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா போலீசார், கொப்பால் மாவட்ட லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற விசாரணையில், இவரது குற்றம் உறுதியானது. லஸ்கர் நாயக்குக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 1.25 கோடி ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி ராஜேஸ்வரி ஹெக்டே தீர்ப்பளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!