சிவராத்திரியில் 2வது பட்டியல்: ம.ஜ.த., திட்டம்
பெங்களூரு-சட்டசபை தேர்தலுக்கான ம.ஜ.த., வேட்பாளர்கள்இரண்டாவது பட்டியல், சிவராத்திரி நாளில் வெளியிட வாய்ப்புள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு, ம.ஜ.த., ஏற்கனவே 93 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அறிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்தில், 60 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட, தயாராகி வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 93 வேட்பாளர்கள், அவரவர் தொகுதியை சுற்றி வந்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி, பஞ்சரத்ன யாத்திரையில் ஈடுபட்டுள்ளதால், இரண்டாவது பட்டியல் வெளியாவது தாமதமாகிறது. சிவராத்திரி நாளில், பட்டியல் வெளியாகும் வாய்ப்புள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!