சிவகுமாரால் என் வாழ்க்கை பாழாகி விட்டது மாஜி அமைச்சர் ஜார்கிஹோளி குற்றச்சாட்டு
பெலகாவி-''காங்கிரஸ் தலைவர் சிவகுமார் என் தனிப்பட்ட வாழ்க்கையை பாழாக்கி விட்டார். என் மீதான ஆபாச 'சிடி' வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்க வேண்டும், '' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:
என்னை கண்டால், சிவகுமாருக்கு பயம். என் தனிப்பட்ட வாழ்க்கையை பாழாக்கி விட்டார். இதற்காக 40 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். என் மீதான ஆபாச 'சிடி' வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்க வேண்டும். டில்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து, வேண்டுகோள் விடுப்பேன்.
எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என, கட்சி மேலிடத்திடம் கூறிவிட்டேன். வெறும் மூன்று மாதங்கள் மட்டும், அமைச்சராவதில் அர்த்தம் இல்லை. தேர்தல் முடிந்து, கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின், அமைச்சராவேன்.
முதல்வர் பசவராஜ் பொம்மை மீது, நாங்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை. கூட்டு தலைமையில் ேர்தலை சந்திப்போம். பஞ்சமசாலி போராட்டத்துக்கு, முதலில் இருந்தே என் ஆதரவு உள்ளது. இதில் சிலரை கை விட்டால் நல்லது என்பது, என் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!