சிவகுமார் துாய்மையானவர் முதல்வர் பொம்மை கிண்டல்
பெங்களூரு-வாக்காளர்களுக்கு பணத்தாசை காண்பித்ததாக புகார் அளித்துள்ள காங்கிரசாருக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
காங்கிரசார் கீழ்த்தரமான அரசியல் செய்கின்றனர். பொய்யான, அரசியல் உள் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி, மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் என்றால், பிரஷர் குக்கர் கட்சி. யாராவது ஏதாவது கூறினால், அதற்கு அரசு பொறுப்பாளி அல்ல.
தேர்தல் நேரத்தில், பிரஷர் குக்கர் கொடுத்து வெற்றி பெறுவது, அவர்களின் பழக்கம். எனவே அவர்களுக்கு குக்கர் மீது, அதிக அன்பு. அதில் குண்டு வைத்தாலும், பிரஷர் குக்கர் என்றே கூறுவர்.
நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில், ஜீப் ஊழல் துவங்கியது. அன்றைய ராணுவ அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. ஊழல் என்பது காங்கிரசின் பிரிக்க முடியாத அங்கம். சிவகுமாரை பற்றி நான் என்ன சொல்வது; அவர் மிகவும் துாய்மையான மனிதர்; அரசியலில் அவரைப் போன்று சுத்தமானவர் யாரும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!