திருக்குடும்ப தேவாலய விழா இன்று துவக்கம்
ராமமூர்த்தி நகர்-ராமமூர்த்தி நகர் திருக்குடும்ப தேவாலய ஆண்டு விழாவில் இன்று மாலை 5:30 மணிக்கு, அருட்தந்தை ஜெரோம் ஸ்டானிஸ்லாஸ் கொடியேற்றி, தமிழ், கன்னடத்தில் ஆடம்பர திருப்பலி நிகழ்த்துகிறார்.
நாளை மாலையில் அருட்தந்தை அருளப்பா கன்னடத்திலும்; 28ம் தேதி அருட்தந்தை ஆரோக்கியசாமி செபாஸ்டியன் தமிழிலும் திருப்பலி நடத்துகின்றனர்.
ஆண்டு விழாவான 29ம் தேதி காலையில் கன்னடம், தமிழ், ஆங்கிலம், மலையாளத்தில் அருட்தந்தைகள் திருப்பலி நடத்துகின்றனர். மாலையில் அருட்தந்தை அமர்நாத் தினேஷ் ராய் திருப்பலி நிகழ்த்துகிறார். திருக்குடும்ப தேரை, அருட்தந்தை ஜான் சுதீப் அர்ச்சித்து துவக்கி வைக்கிறார்.
விழாவில் பங்கேற்குமாறு தேவாலய பங்கு தந்தை சூசைராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!