மல்லேஷ் உதவி குழு இன்று நலத்திட்ட விழா
காந்தி நகர்-மல்லேஷ் உதவும் குழு சார்பில் இன்று மாலை 5:00 மணிக்கு ஸ்ரீராமபுரம் சன்ரைஸ் சதுக்கம் அருகிலுள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில், 5,000 பெண்களுக்கு சேலை; 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான இன்சூரன்ஸ் பாலிசி பாண்டு வழங்குதல்; நடைபாதை வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி வழங்குதல்; மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர்.
முதியோர், விதவை பென்ஷன் தொகை அனுமதி பத்திரம் வழங்குதல்; கண் அறுவை சிகிச்சை செய்தோருக்கு இலவச மூக்கு கண்ணாடி; பின்தங்கிய உடல்நலம் பாதித்த மக்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது என குழு செயல் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான மல்லேஷ் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!