கைதான பாக்., இளம்பெண் நாடு திரும்ப மறுப்பதால் சிக்கல்
பெங்களூரு-பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜேவனி, 19, என்பவருக்கு,'டேட்டிங்' செயலி வழியாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த முலாயம் சிங், 25, அறிமுகமானார். இவர்கள் பரஸ்பரம் காதலித்தனர். நேபாள எல்லை வழியாக, இந்தியாவுக்குள் நுழைந்த இக்ரா, முலாயம் சிங்கை திருமணம் செய்துகொண்டார்.
பிழைப்பு தேடி பெங்களூரு வந்தனர். முலாயம் சிங் செக்யூரிட்டியாக பணிக்கு சேர்ந்தார். இருவரும் பெல்லந்துாரில் வாடகை வீட்டில் வசித்தனர். இக்ரா பாகிஸ்தானில் உள்ள தன் பெற்றோரை, தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். இந்த தகவல் மத்திய உளவுத்துறைக்கு தெரிந்தது. உடனடியாக பெங்களூரு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசாரும் விசாரணை நடத்தி, இக்ராவை கண்டுபிடித்து கைது செய்தனர். முலாயம் சிங்கும் கைதானார். இக்ராவை மகளிர் மறுவாழ்வு மையத்தில் வைத்திருந்தனர். தற்போது இவரை பாகிஸ்தானுக்கு அனுப்ப, போலீசார் ஏற்பாடு செய்கின்றனர்.
ஆனால் இக்ரா, 'நான் என் கணவர் முலாயம் சிங்கை விட்டு விட்டு, பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளோம். இங்குதான் வசிப்பேன்' என பிடிவாதம் பிடிக்கிறார்.
அவரை எப்படி சொந்த நாட்டுக்கு அனுப்புவது என தெரியாமல், போலீசார் மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!