ஷிவமொகா விமான நிலையத்தில் பொது மக்கள் நுழைய அதிரடி தடை
ஷிவமொகா-புதிதாக கட்டப்பட்டுள்ள ஷிவமொகா விமான நிலையத்தின் பாதுகாப்பை மனதில் கொண்டு, பொது மக்கள் நுழைய தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, ஷிவமொகா கலெக்டர் செல்வமணி கூறியதாவது:
ஷிவமொகா விமான நிலையம் கட்டும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
சில நாட்களில் மத்தியில் இருந்து, ஆய்வுக்குழுவினர் வருகை தருகின்றனர். விமான நிலையத்தில் முக்கியமான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமின்றி, பொது மக்கள் நுழைவதால், பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்பை, மனதில் கொண்டும், பணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதை தவிர்க்கவும் விமான நிலையத்துக்குள் பொது மக்கள் நுழைய, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
புதிய விமான நிலையத்தை பார்க்க, நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். 'ரன்வே'யில் வாகனத்தை ஓட்டுவதாக, புகார்கள் வந்ததால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!