இன்று குடியரசு தின விழா நகரில் போக்குவரத்து மாற்றம்
பெங்களூரு-பெங்களூரு மானக் ஷா பரேட் மைதானத்தில் இன்று குடியரசு தின விழா நடப்பதை ஒட்டி, நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின், 74வது குடியரசு தினத்தை ஒட்டி, பெங்களூரு மானக் ஷா பரேட் மைதானத்தில், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் இன்று தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்துகிறார். இதையொட்டி, இன்று காலை 8:30 முதல் 10:30 மணி வரை பி.ஆர்.வி., சதுக்கம் முதல் காமராஜர் சாலை சதுக்கம் இடையே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:
இன்பேன்ட்ரி சாலையில் இருந்து, மணிப்பால் சென்டர் நோக்கி வரும் வாகனங்கள், சபீனா பிளாசா அருகில் இடது புறம் திரும்பி, டிஸ்பென்சரி சாலை, காமராஜர் சாலை, டிக்கென்சன் சாலை சதுக்கம், கப்பன் சாலை சதுக்கம் வழியாக செல்லலாம்.
அனில் கும்ப்ளே சதுக்கத்தில் இருந்து, கப்பன் சாலை நோக்கி வரும் வாகனங்கள், சென்ட்ரல் தெரு சதுக்கத்தில் வலது புறம் திரும்பி, இன்பேன்ட்ரி சாலை, சபீனா பிளாசா, டிஸ்பென்சரி சாலை, காமராஜர் சாலை, டிக்கென்சன் சாலை சதுக்கம் வழியாக செல்லலாம்.
அனில் கும்ப்ளே சதுக்கம் முதல், சிவாஜிநகர் பஸ் நிலையம் வரையிலும்; சி.டி.ஓ., சதுக்கம் முதல், கே.ஆர்.சாலை மற்றும் கப்பன் சாலை சதுக்கம் வரையிலும்; அனில் கும்ப்ளே சதுக்கம் முதல், குயின்ஸ் சாலை சதுக்கம் வரையிலும் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்த கூடாது.
முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மைதானத்தின், 2வது நுழைவு வாயிலிலும்; வி.வி.ஐ.பி., பாஸ் வைத்திருப்போர், 3வது நுழைவு வாயிலிலும்; வி.ஐ.பி., பாஸ் வைத்திருப்போர், பொது மக்கள், 4வது நுழைவு வாயிலிலும் விழாவுக்கு வர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!