ADVERTISEMENT
சிவராஜ் தங்கடகி உருவ படத்தை மார்பில் பச்சை குத்தியுள்ள விஜய்சிங் ராஜ்புத்.
கொப்பால்-கனககிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவராஜ் தங்கடகி ஆதரவாளர் ஒருவர், அவரின் உருவ படத்தையும், 'மை பாஸ்' என்றும் தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார்.
கொப்பால் மாவட்டம், காரடகியை சேர்ந்தவர் விஜய்சிங் ராஜ்புத், 50. கனககிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவராஜ் தங்கடகியின் தீவிர ஆதரவாளர். தனியார் பள்ளி பஸ் ஓட்டுனர்.
தனது மார்பில் சிவராஜ் தங்கடகி உருவத்துக்கு கீழ் 'மை பாஸ்' என பச்சை குத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலில் சிவராஜ் தங்கடகி வெற்றி பெற்று, அமைச்சராக வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வளர்ச்சி அடைய வேண்டும். தொகுதியில் அமைதி, சட்டம் - ஒழுங்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வுடன் பச்சை குத்தியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!