எடியூரப்பாவை குளிர்விக்க பிறந்த நாளுக்கு வரும் மோடி?
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பிறந்த நாள் அடுத்த மாதம் 27ம் தேதி வருகிறது. இதை ஷிவமொகாவில் பிரமாண்டமாக கொண்டாட பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
எடியூரப்பாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவித்துள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி 27ம் தேதி ஷிவமொகாவில் நடக்கும் பிரமாண்ட விழாவில் எடியூரப்பாவை மீண்டும், 'மாஸ் லீடராக' காட்டும் பணிகள் நடக்கும். அதிலிருந்து எடியூரப்பா தேர்தல் பிரசார பயணத்தை துவங்குவார் என கூறப்படுகிறது.
கடந்த ௨௦௨௦ல் எடியூரப்பாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க பா.ஜ., தலைவர்கள் விருப்பம் காட்டவில்லை. அதனால் அன்று, சாதாரண விழா போல மாறி விட்டது. அதன் பிறகு அவரை புறக்கணித்ததால் கட்சியின் நிலைமையும் பலவீனமாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறை, எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டால் பா.ஜ., தேர்தலில் வெற்றி பெறாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் டில்லியில் நடந்த விழாவில் கூட, பிரதமர் நரேந்திர மோடி 15 நிமிடங்கள் வரை தனியாக சந்தித்து பேசி, அவரின் முக்கியத்துவம் இந்த நேரத்தில் எந்த அளவுக்கு தேவை என்பதை உணர்த்தி உள்ளார்.
இந்த நேரத்தில், அவரது பிறந்த நாளை கொண்டாடி, எடியூரப்பா ஆதரவாளர்களின் கோபத்தை தணிக்க கட்சி முடிவு செய்துள்ளது. அன்றைய நாளில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உட்பட பல முக்கிய தேசிய தலைவர்கள் பங்கேற்பர் எனவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!