Load Image
Advertisement

சீக்ரெட் சிங்காரம்



ஆட்டம் ஆரம்பம்!

எத்தனை நாளைக்கு தான் டில்லிக்குள்ளயே சுத்திக்கிட்டு இருக்கிறதுன்னு நெனச்ச துடைப்ப கட்சி, தன் எல்லையை விரிவுபடுத்த நெனச்சது. முதல் முயற்சியிலேயே பஞ்சாப்ல தேசிய கட்சியை விரட்டி விட்டு ஆட்சியை பிடிச்சது.

இதே ஜோர்ல தெற்கு பக்கமும் கவனத்தை திருப்பி இருக்கு. அதுக்காக கர்நாடகாவுல கட்சியை பலப்படுத்துறதுக்காக சில பேரை லிஸ்ட் போட்டு வச்சி இருக்காங்க. இவங்கள்ல ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி மட்டும் அல்லது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளும் இருக்காங்க.

அவங்க ஒவ்வொருத்தரா கட்சிக்குள்ள ஐக்கியமாக, நாள் பார்த்துட்டு இருக்காங்க. முதல் ஆளா விருப்ப ஓய்வு வாங்கின போலீஸ் அதிகாரி சேர்ந்திருக்காரு. இதுக்கு அப்புறம் படிப்படியாக எல்லோரையும் இணைச்சி அடுத்த தேர்தல்ல பலத்த காட்ட நினைச்சி இருக்காங்க.

இதனால துடைப்ப கட்சிக்காரங்களுக்கு உற்சாகம் அதிகமாயிடுச்சி. எங்களோட ஆட்டம் ஆரம்பம்னு சொல்லிட்டு இருக்காங்க. இதனால இந்த தேர்தல்ல நான்கு முனை போட்டி இருக்கும்னு சொல்லப்படுது

அவரு வந்தா நல்லதுதான்!

தொட்ட கவுடரு கட்சியில இருந்து இன்னொரு முக்கிய தலைவரான சிவமானவரு வெளியே போறதா ஏற்கனவே சொல்லிட்டாரு. இது தொட்ட கவுடருக்கும், அவரோட மகனுக்கும் சற்று அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கு. அவரோட இடத்தை நிரப்புற மாதிரியான ஆளை தேடிட்டு இருக்காங்க.

அதோட அவரை சமாதானப்படுத்தும் முயற்சியும் திரை மறைவில் நடந்துட்டு இருக்கு. அவரு சமாதானமாவாரான்னு தெரியல. ஆனா, அவரு கதரு கட்சியில சேரப்போறதா தகவல் பரவிட்டு வருது. இதனால், அக்கட்சிக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கு. இதன் மூலம் தொட்ட கவுடரின் மாவட்டத்தில் கதரின் பவரு ஓரளவுக்கு உயரலாம்னு கணக்கு போட்டிருக்கு.

இவருக்கு ஆளுங்கட்சிக்காரங்களும் வலை வீசிட்டு வருவதா சொல்லப்படுது. எனவே எந்த கட்சியில இணைவார்னு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

**

தலைநகர்தான் குறி!

காவி கட்சி கர்நாடகாவுல 100 இடத்தை தாண்டி வெற்றி பெற கூடிய அளவுக்கு பவர்புல்லாதான் இருக்கு. ஆனா தலைநகரை பொறுத்தவரை வீக்காத்தான் இருக்கு. கடந்த தேர்தல்ல 28 தொகுதியில எட்டில்தான் ஜெயிக்க முடிஞ்சது. ஏன்னா தலைநகரின் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற கூடிய அளவுக்கு வேட்பாளர்கள் இல்லை. அதனால இந்த முறை தலைநகரில் 20 தொகுதியை டார்க்கெட்டா வச்சிருக்கு.

இந்த முறை பிரதமரை வச்சி பெரிய அளவுல 'ரோட் ஷோ' நடத்த காவி கட்சி முடிவு பண்ணி இருக்கு. அதுக்கு முன்ன ஒரு ஆப்பரேஷன் தாமரை நடத்தவும் முடிவு பண்ணி இருக்காங்களாம். இதுல தலைநகரை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தாமரையில ஐக்கியம் ஆவாங்கன்னு சொல்லப்படுது. அதேபோல கதரு கட்சியும் தலைநகரை குறியா வச்சி செயல்பட்டுட்டு வருது. தலைநருக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட முடிவு பண்ணி இருக்காங்களாம்.

**கூண்டோடு ராஜினாமா!

பட்டு மாவட்டத்துல மாநில கட்சியும், தேசிய அளவிலான எதிர்க்கட்சியும் பவர்புல்லா இருக்கு. ஆனா இந்த மாவட்டத்துல தன் ஆதிக்கத்தை செலுத்த ஆளும் தேசிய கட்சி பல முயற்சிகளை பண்ணிட்டு வருது. இந்த நேரத்துல அந்த கட்சியின் தலித் பிரமுகர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு பண்ணி இருக்காங்களாம்.

ஏன்னா, இந்த மாவட்டத்துல ஆளும் தேசிய கட்சி சார்புல போட்டியிடும் வேட்பாளரை இன்னும் அறிவிக்கல. ஆனா நாலு பேரு மட்டும், தான் தான் இந்த தொகுதியின் வேட்பாளர்கள்னு சொல்லிட்டு நடமாடிட்டு வர்றாங்களாம். இவங்க, கட்சி தொண்டர்களை மதிப்பதில்லையாம். இவங்க நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவிச்சிதான் கூண்டோட ராஜினாமா செய்ய முடிவு பண்ணி இருக்காங்க. பட்டு மாவட்டத்தை கைப்பற்ற நினைக்கும் ஆளுங்கட்சிக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்காம்.

***

ஆட்டம் ஆரம்பம்!

எத்தனை நாளைக்கு தான் டில்லிக்குள்ளயே சுத்திக்கிட்டு இருக்கிறதுன்னு நெனச்ச துடைப்ப கட்சி, தன் எல்லையை விரிவுபடுத்த நெனச்சது. முதல் முயற்சியிலேயே பஞ்சாப்ல தேசிய கட்சியை விரட்டி விட்டு ஆட்சியை பிடிச்சது.

இதே ஜோர்ல தெற்கு பக்கமும் கவனத்தை திருப்பி இருக்கு. அதுக்காக கர்நாடகாவுல கட்சியை பலப்படுத்துறதுக்காக சில பேரை லிஸ்ட் போட்டு வச்சி இருக்காங்க. இவங்கள்ல ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி மட்டும் அல்லது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளும் இருக்காங்க.

அவங்க ஒவ்வொருத்தரா கட்சிக்குள்ள ஐக்கியமாக, நாள் பார்த்துட்டு இருக்காங்க. முதல் ஆளா விருப்ப ஓய்வு வாங்கின போலீஸ் அதிகாரி சேர்ந்திருக்காரு. இதுக்கு அப்புறம் படிப்படியாக எல்லோரையும் இணைச்சி அடுத்த தேர்தல்ல பலத்த காட்ட நினைச்சி இருக்காங்க.

இதனால துடைப்ப கட்சிக்காரங்களுக்கு உற்சாகம் அதிகமாயிடுச்சி. எங்களோட ஆட்டம் ஆரம்பம்னு சொல்லிட்டு இருக்காங்க. இதனால இந்த தேர்தல்ல நான்கு முனை போட்டி இருக்கும்னு சொல்லப்படுது.

அவரு வந்தா நல்லதுதான்!

தொட்ட கவுடரு கட்சியில இருந்து இன்னொரு முக்கிய தலைவரான சிவமானவரு வெளியே போறதா ஏற்கனவே சொல்லிட்டாரு. இது தொட்ட கவுடருக்கும், அவரோட மகனுக்கும் சற்று அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கு. அவரோட இடத்தை நிரப்புற மாதிரியான ஆளை தேடிட்டு இருக்காங்க.

அதோட அவரை சமாதானப்படுத்தும் முயற்சியும் திரை மறைவில் நடந்துட்டு இருக்கு. அவரு சமாதானமாவாரான்னு தெரியல. ஆனா, அவரு கதரு கட்சியில சேரப்போறதா தகவல் பரவிட்டு வருது. இதனால், அக்கட்சிக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கு. இதன் மூலம் தொட்ட கவுடரின் மாவட்டத்தில் கதரின் பவரு ஓரளவுக்கு உயரலாம்னு கணக்கு போட்டிருக்கு.

இவருக்கு ஆளுங்கட்சிக்காரங்களும் வலை வீசிட்டு வருவதா சொல்லப்படுது. எனவே எந்த கட்சியில இணைவார்னு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தலைநகர்தான் குறி!

காவி கட்சி கர்நாடகாவுல 100 இடத்தை தாண்டி வெற்றி பெற கூடிய அளவுக்கு பவர்புல்லாதான் இருக்கு. ஆனா தலைநகரை பொறுத்தவரை வீக்காத்தான் இருக்கு. கடந்த தேர்தல்ல 28 தொகுதியில எட்டில்தான் ஜெயிக்க முடிஞ்சது. ஏன்னா தலைநகரின் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற கூடிய அளவுக்கு வேட்பாளர்கள் இல்லை. அதனால இந்த முறை தலைநகரில் 20 தொகுதியை டார்க்கெட்டா வச்சிருக்கு.

இந்த முறை பிரதமரை வச்சி பெரிய அளவுல 'ரோட் ஷோ' நடத்த காவி கட்சி முடிவு பண்ணி இருக்கு. அதுக்கு முன்ன ஒரு ஆப்பரேஷன் தாமரை நடத்தவும் முடிவு பண்ணி இருக்காங்களாம்.

இதுல தலைநகரை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தாமரையில ஐக்கியம் ஆவாங்கன்னு சொல்லப்படுது. அதேபோல கதரு கட்சியும் தலைநகரை குறியா வச்சி செயல்பட்டுட்டு வருது. தலைநருக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட முடிவு பண்ணி இருக்காங்களாம்.கூண்டோடு ராஜினாமா!

பட்டு மாவட்டத்துல மாநில கட்சியும், தேசிய அளவிலான எதிர்க்கட்சியும் பவர்புல்லா இருக்கு. ஆனா இந்த மாவட்டத்துல தன் ஆதிக்கத்தை செலுத்த ஆளும் தேசிய கட்சி பல முயற்சிகளை பண்ணிட்டு வருது. இந்த நேரத்துல அந்த கட்சியின் தலித் பிரமுகர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு பண்ணி இருக்காங்களாம்.

ஏன்னா, இந்த மாவட்டத்துல ஆளும் தேசிய கட்சி சார்புல போட்டியிடும் வேட்பாளரை இன்னும் அறிவிக்கல. ஆனா நாலு பேரு மட்டும், தான் தான் இந்த தொகுதியின் வேட்பாளர்கள்னு சொல்லிட்டு நடமாடிட்டு வர்றாங்களாம். இவங்க, கட்சி தொண்டர்களை மதிப்பதில்லையாம்.

இவங்க நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவிச்சிதான் கூண்டோட ராஜினாமா செய்ய முடிவு பண்ணி இருக்காங்க. பட்டு மாவட்டத்தை கைப்பற்ற நினைக்கும் ஆளுங்கட்சிக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்காம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement