ADVERTISEMENT
பெங்களூரு-முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு சுமத்திய அமைச்சர் மாதுசாமிக்கு ஒக்கலிகர் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா மற்றும் அவரது குடும்பத்தை விமர்சித்து, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று துமகூரில் ஒக்கலிகர் சமுதாய தலைவர்கள் சிலர் கூறியதாவது:
தேவகவுடா குடும்பத்தை பற்றி அவதுாறாக பேசுவதை மாதுசாமி நிறுத்த வேண்டும். தேவகவுடா, பிரதமராக உயர்ந்து, நாட்டுக்கு பங்களித்தார். மாதுசாமி, வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்.
தேவகவுடா குடும்பம் கொள்ளை அடித்திருந்தால், ஆட்சியில் உள்ள பா.ஜ., ஏன் விசாரணை நடத்தவில்லை.
மாதுசாமி யாரையும் வளர்க்கவில்லை. தன் பேச்சை கேட்பவர்களை தன்னுடனேயே வைத்திருக்கிறார். படித்தவர்கள் அவர்களுடன் இல்லை.
தாலுகாவில் ஒக்கலிகர் சமூகத்தினர் 40 ஆயிரம் பேர் உள்ளனர். வரும் தேர்தலில் மாதுசாமியை மூன்றாவது இடத்துக்கு தள்ளுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!