அன்றைய அமைதிக்கு இன்று காங்., பதிலடி
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றதில் இருந்தே, மத ரீதியிலான பிரச்னைகள் தலைதுாக்கியுள்ளன.
ஹிஜாப், ஹலால், ஒலிப்பெருக்கி சர்ச்சை, இஸ்லாமிய வியாபாரிகள் புறக்கணிப்பு என அடுத்தடுத்து கிளம்பிய பிரச்னைகளால் கர்நாடகாவில் அவ்வப்போது பிரச்னை வெடிக்கிறது.
ஹிஜாப், ஹலால் பிரச்னை எழுந்த போது காங்கிரஸ் அமைதியை கடைப்பிடித்தது. இது குறித்து யாரும் பேசக்கூடாது என கட்சியினருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ளதால், பா.ஜ., - காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிடுகின்றனர். அடிக்கடி சுற்றுப்பயணம் செல்கின்றனர்.
முந்தைய பிரச்னைக்கு தேர்தல் மூலம் பதிலடி கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. திரைமறைவில் பா.ஜ.,வின் ஹிந்துத்துவா கொள்கைக்கு எதிராக வியூகம் அமைத்து வருகிறது.
இதற்காக சில தலைவர்களை தேர்வு செய்து, அவர்கள் மூலம் பேச வைக்கின்றனர்.
- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!