ஒரு ஓட்டுக்கு ரூ.6,௦௦௦: ஜார்கிஹோளி சர்ச்சை
ஒரு ஓட்டுக்கு 6,௦௦௦ ரூபாய் தருவதாக கர்நாடக பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் அரசியல் கட்சியினர் தங்களது பிரசாரத்தை துவக்கி விட்டனர். தலைவர்கள் சீட் கேட்டு மேலிடத்திடம் முறையிட்டு வருகின்றனர். சீட் உறுதியானவர்கள், பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.
இதனிடையே ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் தருவதாக பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவியில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அவர், 'வாக்காளர்களுக்கு மற்ற கட்சியினர் பரிசுகள் கொடுப்பதை பார்க்கிறேன். இதுவரை குக்கர், மிக்சி போன்ற சமையலறை பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவையெல்லாம் சேர்த்து 3,000 தான் வரும். ஆனால், நாங்கள் உங்களுக்கு 6,000 ரூபாய் தருகிறோம். தராவிட்டால் எங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம்' என தெரிவித்தார்.
இவரின் கருத்துக்கு நீர்ப்பாசன அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். ''எங்கள் கட்சியில் இதுபோன்ற விஷயங்களுக்கு இடமில்லை. ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது, ஒருவர் அறிக்கை கொடுத்தால் அது கட்சியின் அறிக்கை அல்ல.
''அவருடைய தனிப்பட்ட விஷயம். எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது. பா.ஜ., தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். முழு பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என்பது நிச்சயம். சீட் கொஞ்சம் குறைந்தாலும் பா.ஜ., ஏதாவது செய்யும். கவலைப்பட வேண்டாம்,'' என்றார்.
ரமேஷ் ஜார்கிஹோளி கூறுகையில், ''எக்காரணம் கொண்டும் பா.ஜ.,விலிருந்து விட்டு விலக மாட்டேன். இங்கு தான் இருப்பேன். சரித்திரம் படைப்பேன்,'' என்றார்.

காங்., புகார்
இதற்கிடையில், ரமேஷ் ஜார்கிஹோளியின் பேச்சை கண்டித்து காங்கிரஸ், ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
புகாரில், 'பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், முதல்வர் பசவராஜ் பொம்மை, ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என கூறி உள்ளது.
- நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!