கோலாரில் கோஷ்டி பூசல் காங்., மேலிடம் திணறல்
கோலாரில் போட்டியிடுவதாக சித்தராமையா அறிவித்த பின், கோலார் மாவட்ட அரசியல் சூடுபிடித்துள்ளது. அவருக்கு, எதிர்க்கட்சிகளை விட, சொந்த கட்சியில் உள்ள எதிரிகளே அச்சுறுத்தலாக உள்ளனர்.
கோலாரில் குருபர் சமுதாயத்தைச் சேர்ந்த வர்த்துார் பிரகாஷ், பா.ஜ., சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதால், இதே சமுதாயத்தின் சித்தராமையா போட்டியிடுவது சரியாக இருக்காது.
ஓட்டுகள் சிதறும் என, குருபர் சங்கம் அறிவுறுத்தியது. அதை பொருட்படுத்தாமல், கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக சித்தராமையா அறிவித்தார்.
இவர் இங்கு போட்டியிடுவதில், தலைவர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. மாவட்டத்தில் முனியப்பா, ரமேஷ்குமார் என, இரண்டு கோஷ்டிகள் உள்ளன.
இவர்களின் பனிப்போர், சித்துவின் வெற்றிக்கு வேட்டு வைக்கலாம் என, கட்சி வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.
இதை உணர்ந்துள்ள காங்கிரஸ் மேலிடம், கோலாரில் கோஷ்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
முனியப்பா, ரமேஷ்குமாருக்கு பொறுப்பை பங்கிட்டு அளித்துள்ளது. இரண்டு கோஷ்டியில் உள்ளவர்களுக்கும் வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ரமேஷ் குமாரின் ஆதரவாளர் லட்சுமி நாராயணாவுக்கு மாவட்ட தலைவர் பதவியும், முனியப்பா ஆதரவாளர் ஊருபாகிலு சீனிவாசுக்கு, மாவட்ட செயல் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
பதவிகளை அளித்து, இரண்டு கோஷ்டிகளையும் இணைக்க, கட்சி மேலிடம் முற்பட்டுள்ளது. இந்த முயற்சி பலனளிக்குமா என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!