பா.ஜ., - காங்.,கில் சீட் பெற ராஜாஜி நகரில் கடும் போட்டி
பெங்களூரின், ராஜாஜி நகர் சட்டசபை தொகுதியில், பா.ஜ.,வில் சீட் பெற, கடும் போட்டி எழுந்துள்ளது. இம்முறை போட்டியிட இன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ் குமார் தயாராகி வருகிறார்.
பெங்களூரின் பிரபலமான சட்டசபை தொகுதிகளில், ராஜாஜி நகரும் ஒன்றாகும். இது, பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டை. ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வசிக்கின்றனர். சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள் ஏராளம் உள்ளன. எனவே, இங்கு தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
அக்கம், பக்கத்து சட்டசபை தொகுதிகளை விட, ராஜாஜி நகரில் அடிப்படை பிரச்னைகள் அதிகமாகவே உள்ளது. வெஸ்ட் ஆப் கார்டு சாலையில், மேம்பாலங்கள் கட்டும் பணிகள் இன்னும் முடியவில்லை. லுலு மால்அமைக்கப்பட்ட பின், வாகனங்களின் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலை பள்ளங்கள் உட்பட பல பிரச்னைகள் மக்களை வாட்டி வதைக்கின்றன.
ராஜாஜி நகரில் ஐந்து முறை வெற்றி பெற்ற சுரேஷ் குமார் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறினாலும், மக்களுடனான தொடர்பை விடவில்லை
சில மாதங்களாக தன்பாணியில், தொகுதியை சுற்றி வந்து வாக்காளர்களை ஈர்க்க முயற்சிக்கிறார். இம்முறையும் இவருக்கே சீட் கிடைக்கலாம் என, எதிர்பார்க்கிறார்.
ஆனால், தொகுதியில் சீட் கேட்போர் பட்டியல் நீளுகிறது.பா.ஜ.,வில் இதற்கு முன், ஒருங்கிணைப்பு செயலராக இருந்த ரகுநாத், முன்னாள் கவுன்சிலர்கள் மஞ்சுநாத், ரங்கண்ணா உட்பட சிலர் சீட் கேட்கின்றனர்.
குறிப்பாக ரகுநாத், 'சுரேஷ் குமார், ஏழு முறை சீட் பெற்று, ஐந்து முறை எம்.எல்.ஏ.,வானார். இம்முறை புதியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும். 22 ஆண்டுகளாக கட்சிக்காக உழைக்கும் எனக்கும், ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும்' என பா.ஜ., மேலிடத்திடம் கோரியுள்ளார்.
அதேபோன்று காங்கிரசிலும், சீட்டுக்கு பலத்த போட்டி எழுந்துள்ளது. முன்னாள் மேயர் பத்மாவதி, மஞ்சுளா நாயுடு, பவ்யா நரசிம்ம மூர்த்தி, ரகுவீர் கவுடா என, பலரும் சீட் கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர்.
சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ரகுவீர் கவுடா தொகுதியை சுற்றி வந்து பிரசாரம் செய்கிறார். தொகுதி மக்களை தர்மஸ்தலா, சாமுண்டி மலை போன்ற புண்ணிய தலங்களுக்கு, யாத்திரை அனுப்பினார்.
ம.ஜ.த.,வில் இருந்து, பா.ஜ.,வுக்கு சென்ற எம்.எல்.சி., ஒருவர், ராஜாஜி நகர் தொகுதியில், காங்கிரசில் சீட் பெறமுயற்சிக்கிறார்.
சீட் உறுதியானால் அவர் காங்கிரசுக்கு தாவும் வாய்ப்புள்ளது. இவர் மாநில தலைவர் சிவகுமாருடன், தொடர்பில் இருக்கிறார்.
- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!