ADVERTISEMENT
''நட்சத்திர ஹோட்டல்ல கூட்டம் நடத்தி, பணத்தை வீணடிக்கிறாங்க பா...'' என்றபடியே, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டுல கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் செயல்படுது பா... இந்த சங்கங்கள் தான் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்களை நடத்திட்டு வருது... இந்த சங்கங்கள் பெரும்பாலும் நஷ்டத்துல இயங்குது பா...

''கூட்டுறவுத் துறைக்கு, சென்னை மாதவரத்துல, நவீன வசதிகளோட பயிற்சி மையம் இருக்குது... ரேஷன் கடைகளை தரம் உயர்த்துவது சம்பந்தமா, சமீபத்துல நடந்த மூணு நாள் ஆய்வுக் கூட்டத்தை இந்த பயிற்சி மையத்துல நடத்தாம, நட்சத்திர ஹோட்டல்ல தடபுடலா நடத்தினாங்க பா...
''இதுக்கு லட்சக்கணக்குல செலவு செஞ்சாங்க... சேலத்துல அடுத்த மாசம், 8, 9ம் தேதிகள்ல நடக்க இருக்கும் இணை பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டத் தையும் நட்சத்திர ஹோட்டல்ல நடத்தப் போறாங்களாம்... சங்கங்களின் நிதி நெருக்கடி தெரிஞ்ச அதிகாரிகளே, இப்படி பணத்தை விரயம் செய்யலாமா பா...'' எனக் கேட்டபடியே முடித்தார், அன்வர்பாய்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கூட்டுறவு என்ற பெயரில் கூடி கொள்ளை அடிக்கும் கும்பல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் நட்சத்திர ஓட்டலில் நடத்துவதுதான் அவர்கள் அந்தஸ்த்திற்கு அழகு