நெல் கொள்முதல் முறைகேடா விவசாயிகள் புகார் அளிக்கலாம்
சென்னை:நெல் கொள்முதல் நிலையங்களில் கமிஷன் கேட்டால் நுகர்பொருள் வாணிப கழகத்திடம் 1800 599 3540 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
பொங்கல் பண்டிகை முடிந்ததால் தற்போது வாணிப கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகமாக உள்ளது. அதை விரைந்து கொள்முதல் செய்து அரிசி ஆலைகளுக்கும் கிடங்குகளுக்கும் அனுப்புமாறு மண்டல முதுநிலை மேலாளர்களுக்கு வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது.
வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விவசாயிகளிடம் கமிஷன் கேட்பது நெல் வாங்க தாமதம் செய்வது போன்ற முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கமிஷன் கேட்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் 1800 599 3540 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
அங்கு பெறப்படும் புகார் உடனே வாணிப கழக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!