வீடியோ விவகாரம்: கூடியது சட்டசபை உரிமைக்குழு
சென்னை:தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது விருந்தினர்களில் ஒருவர் மொபைல் போனில் 'வீடியோ' எடுத்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபை உரிமைக் குழு கூட்டம் நேற்று நடந்தது.
தமிழக சட்டசபையில் கடந்த 9ம் தேதி கவர்னர் ரவி உரையாற்றினார். அப்போது விருந்தினர் மாடத்தில் அமர்ந்திருந்த கவர்னரின் விருந்தினர்களில் ஒருவர் சட்டசபை நிகழ்வுகளை தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து உள்ளார்.
இதை சபை உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என தி.மு.க. - எம்.எல்.ஏ. - டி.ஆர்.பி.ராஜா சட்டசபை கூட்டத்தில் வலிறுத்தினார்.
இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க சபை உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் அப்பாவு பரிந்துரைத்தார்.
இந்நிலையில் சபை உரிமைக் குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அன்று பணியில் இருந்த சபை காவலர்கள் மற்றும் நேரில் பார்த்த அலுவலர்களிடம் விசாரணை நடந்து உள்ளது.
அடுத்து விதிகளை மீறி வீடியோ எடுத்த நபரிடம் விசாரிப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!