தமிழை எங்கே தேடுவேன்: ராமதாஸ் வேதனை
சென்னை:'தமிழகத்தில் எங்கே தமிழ் என தேட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளில் அவர்களின் தியாகத்தை போற்றுவோம்.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டோர் தங்களின் உயிரை தியாகம்செய்து மீட்டெடுத்த அன்னை தமிழின் இன்றைய நிலை வேதனை அளிக்கிறது.
கட்டாய பாடமொழியாகவும் தமிழ் இல்லை; பயிற்று மொழியாகவும் தமிழ் இல்லை; அரசு நிர்வாகத்தையும் தமிழ் ஆளவில்லை; ஆலயங்களிலும் தமிழாட்சி இல்லை.
'எங்கே தமிழ்' என்று 'தமிழைத் தேடி...' தான் ஓட வேண்டியிருக்கிறது. இது தமிழர்களுக்குதலைகுனிவு.
அன்னை தமிழை அரியணை ஏற்ற இன்னும் ஒரு மொழிப்போர் தேவை. தமிழை காக்க எந்தவொரு தியாகத்திற்கும் தயாராகவே இருக்கிறேன். அந்த நெடும்பயணத்தின் துவக்கமாக தாய்மொழி நாளில் நான் தொடங்க உள்ள 'தமிழைத் தேடி...'பயணம் அமையும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!