Load Image
Advertisement

மின் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யணும்: அண்ணாமலை

சென்னை:'மின் துறை அமைச்சர் மின் வாரிய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவரது அறிக்கை:

மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில் மின் ஊழியர்கள் மிக முக்கியமானவர்கள். மழை புயலின்போது மின் தடையை உடனுக்குடன் சரி செய்து மக்கள் பெரிதும் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்கின்றனர்.

அந்த தன்னலமற்ற ஊழியர்களுக்கு தி.மு.க. அரசு கொடுக்கும் பரிசு பாதுகாப்பற்ற பணிச்சூழல். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின்துறை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது மின் விபத்தில் மரணம் அடைந்த ஊழியர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

ஆளுங்கட்சிக்கோ அமைச்சருக்கோ ஊழியர்களை பற்றி அக்கறையோ கவலையோ இல்லை.

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் சில மாதங்களில் ஊழியர்கள் உயிர் இழந்துள்ளனர். பல ஊழியர்கள் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மின் துறையில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு மிக முக்கிய தேவை.

அவர்கள் பணிச்சூழலை கவனமாக ஆய்வு செய்து அனைத்து வகை மின் ஆபத்துகள் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் அணியாததால் ஏற்படும் அபாயம் குறித்து அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊழல் இல்லாமல் தரமான மின் உபகரணங்களை கொள்முதல் செய்வதும் மின்சாரத்தால் ஏற்படும் இறப்புகளை குறைக்கும். ஊழியர்களுக்கான பாதுகாப்பை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்; தரமான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஊழியர்களின் பணிச்சூழல் பாதுகாப்பில் தொடரும் அலட்சிய போக்கை நிறுத்திவிட்டு '2020 தொழில்சார் பாதுகாப்பு சுகாதாரம் பணி நிலைமைகள்' குறியீட்டை உடனே அமல்படுத்த வேண்டும்.

இனியும் ஊழியர்கள் உயிரோடு விளையாடும் அலட்சிய போக்கு தொடருமானால் பா.ஜ. வேடிக்கை பார்த்தபடி சும்மா இருக்காது.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement