ADVERTISEMENT
நெல்லிக்குப்பம்:கிறிஸ்தவ மத பிரசாரம் செய்தவர்களை பா.ஜ.,வினர் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.
கடலுாரைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் நேற்று காலை நெல்லிக்குப்பம் ராமு தெரு உட்பட பல இடங்களில் ஒலிபெருக்கி மூலம் ஏசு கிறிஸ்துவின் பெருமைகளை பிரசாரம் செய்தனர். மேலும் அவர்கள் வீடு வீடாக சென்று கிறிஸ்துவின் பெருமைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதையறிந்து பா.ஜ., நகர தலைவர் வேலுமணி தலைமையில் அக்கட்சியினர் திரண்டு, மத பிரசாரம் செய்தவர்களை தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் அங்கு கூடியதால் பரபரப்பு நிலவியது.பா.ஜ.,வினர் மற்றும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக, பிரசாரம் செய்ய வந்த கிறிஸ்தவர்கள் வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினர். அவர்களை பா.ஜ.,வினர் அழைத்துச் சென்று, கடலுாருக்கு பஸ் ஏற்றி அனுப்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!