பஸ் ஓட்டையில் விழுந்து மாணவி இறந்த வழக்கு
செங்கல்பட்டு:தாம்பரம் தனியார் பள்ளி பேருந்தில் ஓட்டை வழியே விழுந்து பள்ளி மாணவி இறந்த வழக்கில் பத்து ஆண்டுகளுக்கு பின் பள்ளி தாளாளர் மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட எட்டு பேரை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தாம்பரம் முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வராஜ் நகரைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகள் ஸ்ருதி 7, இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
2012ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பள்ளி பேருந்தில் ஸ்ருதி அமர்ந்திருந்த இருக்கை ஆடியது. அப்போது பேருந்தில் இருந்த ஓட்டையில் ஸ்ருதி கீழே விழுந்து பலத்த காயமடைந்து இறந்தார்.
பள்ளி தாளாளர் விஜயன் 60 அவரது சகோதார்கள் பால்ராஜ் 58, ரவி 52, பழைய பெருங்களத்துார் யோகேஷ் சில்வேரா 32, தனியார் பைனான்சியரான சென்னை மயிலாப்பூர் ராஜசேகரன் 39, மோட்டார் வாகன ஆய்வாளரான வந்தவாசி தெள்ளார் பகுதியைச் சேர்ந்த பிரகாசம் 31, பேருந்து பராமரிப்பாளரான சீமான் 58, ஓட்டுனர் சண்முகம் 18, கிளீனர் ஆகியோரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி காய்த்ரி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.விசாரணை முடிந்து நேற்று காலை மேற்கண்ட அனைவரும் ஆஜராகினர்.
மதியம் 3:00 மணிக்கு வழக்கில் அரசு தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் பள்ளி தாளாளர் விஜயன் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் உட்பட எட்டு பேரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் 35 சாட்சிகளும் பள்ளி தரப்பில் எட்டு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.வையாபுரி பள்ளி தரப்பில் சீனியார் வழக்கறிஞர்கள் ஆர்.விஜயகுமார் என்.கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எது நிரூபணம் ஆகவில்லை? பஸ்ஸில் இருந்த ஓட்டையா, குழந்தை கீழே விழுந்து இறந்ததா? நிரூபணம் ஆனது இதுதான்! பணபலம்!