புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு கமிஷனர் உத்தரவு ரத்து
சென்னை:உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து, உணவு பாதுகாப்பு கமிஷனர் பிறப்பித்த அறிவிப்பாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த, 2006ல், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, வாசனை மற்றும் மெல்லும் வகையிலான புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து, உணவு பாதுகாப்பு கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.
தடையை மீறி நடந்த புகையிலை பொருட்கள் விற்பனைக்காக, சம்பந்தப்பட்டவர்களுக்கு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், 'நோட்டீஸ்' அனுப்பினர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புகையிலை பொருட்கள் விளம்பர தடை மற்றும் வர்த்தக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், புகையிலை பொருட்கள், சிகரெட் வருவதால், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என உத்தரவிட்டது.
நோட்டீசை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, விழுப்புரம் மாவட்ட, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி மேல்முறையீடு செய்தார்.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க, வினியோகிக்க, விற்பனை செய்ய தடை விதித்து, உணவு பாதுகாப்பு கமிஷனர் பிறப்பித்த அறிவிப்பாணையை எதிர்த்தும், கிரிமினல் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், குமரேஷ் பாபு அமர்வு பிறப்பித்த உத்தரவு:
உணவு பாதுகாப்பு சட்டத்தில், பொது மக்கள் உடல் நலன் கருதி, உணவுப் பொருள் எதையும் தயாரிக்க, வினியோகிக்க, விற்பனை செய்ய, தடை விதிக்கும் அதிகாரம், உணவு பாதுகாப்பு கமிஷனருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டு வரை தடை விதிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், இந்த அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவை, நிரந்தர தடை விதிக்க பயன்படுத்த முடியாது. எனவே, தற்காலிக நடவடிக்கையாக அறிவிப்பாணையை பிறப்பிக்க முடியும்.
அதேநேரத்தில், தொடர்ந்து அறிவிப்பாணை பிறப்பித்து, நிரந்தர தடை விதிக்க ஏதுவாக, உணவு பாதுகாப்பு கமிஷனரை அனுமதிப்பது என்பது, சட்டத்தில் இல்லாத அதிகாரத்தை வழங்குவது போலாகி விடும்.
புகையிலை பொருட்களுக்கு முழுமையான தடை சட்டத்தில் இல்லை. அவசரகால சூழ்நிலையில், தற்காலிகமாக தடை விதிக்க, அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, தொடர் அறிவிப்பாணையை பிறப்பிக்க, கமிஷனருக்கு அதிகாரம் இல்லை; அதனால், அந்த அறிவிப்பாணைகள் ரத்து செய்யப்படுகின்றன.
தடை அறிவிப்பின் அடிப்படையில், தனியார் நிறுவனத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கையும், ரத்து செய்யப்படுகிறது.
உணவு பாதுகாப்பு அதிகாரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும், தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!