ADVERTISEMENT
சென்னை:''தமிழகத்தின் ஓட்டுப்பதிவு 90 சதவீதம் என்ற நிலையை எட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும்'' என கவர்னர் ரவி தெரிவித்தார்.
தேர்தல் கமிஷன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. இதையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கவர்னர் ரவி பேசியதாவது:
தேர்தல் ஜனநாயக நடைமுறைகளின் ஆணி வேராக இருக்கும் வாக்காளர்களின் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
கடந்த சில தேர்தல்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காண முடிகிறது. அதாவது பெண்கள் அதிகம் ஓட்டளிக்கின்றனர். தற்போது இளைஞர்கள் 18 வயதுள்ளவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் தேர்தல் நடைமுறையில் பங்குபெற கூடுதல் பொறுப்பு உள்ளது.
இளைஞர்களே மாற்றத்துக்கான அடித்தளம். எனவே இளைஞர்கள் பெண்கள் புதிய வாக்காளர்கள் ஓட்டின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அனைத்து நிலைகளிலும் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது; தேர்தல் நடைமுறையிலும் முன்னிலை பெற வேண்டும்.
மாநிலத்தில் 70 சதவீதமாக உள்ள ஓட்டுப்பதிவு 90 சதவீதம் என்ற நிலையை எட்ட வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்ய அனைவரும் பொறுப்புணர்வுடன் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.

வாழ்க தமிழ்நாடு
கவர்னர் ரவி தன் பேச்சை முடிக்கும்போது தமிழில் 'நன்றி; வாழ்க தமிழ்நாடு; வாழ்க பாரதம்' எனக் கூறி நிறைவு செய்தார். அவர் தமிழகம் எனக் கூறுவதாக சர்ச்சை எழுந்த நிலையில் வாழ்க தமிழ்நாடு எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!