மாநில கல்வி கொள்கை ஏப்ரலுக்குள் தயாராகும்
சென்னை:தமிழக மாநில கல்வி கொள்கை தொடர்பாக, பல்வேறு மாநில பல்கலைகளின் துணைவேந்தர்களுடன், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கல்வி கொள்கை குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன், உயர்கல்வி துறை செயலர் கார்த்திகேயன் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின், ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் அளித்த பேட்டி:
பல்வேறு மாநில துணைவேந்தர்களிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அவர்களில் பலர், அனைத்து பல்கலைகளிலும் பல்வேறு வகை பாடத்திட்டங்கள் இருந்தால் தான், மாணவர்களின் திறன் அதிகரிக்கும் என்றனர்.
கல்வி கொள்கையின் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி, பிப்ரவரியில் துவங்கும்; ஏப்ரல் இறுதிக்குள் முடித்து, தமிழக அரசிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
புதிய தொழில்நுட்பங்கள், புதிய பாடத் திட்டங்கள், பாலியல் விழிப்புணர்வு குறித்த கல்வி போன்றவை குறித்தும், கருத்துகள் பெறப்பட்டு, அதன் செயல் திட்டங்கள் குறித்த பரிந்துரைகள், அறிக்கையில் இடம் பெறும், என்றார்.-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!