பிளஸ் 1 தேர்வு மாணவர் பட்டியல் தயார்
சென்னை:பிளஸ் 1 பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான பெயர் பட்டியல், www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தங்கள் எல்லைக்கு உட்பட்ட மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், பயனாளர் அடையாள எண்ணைப் பயன்படுத்தி, இரண்டு வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மாணவர்களின் விபரங்களில் திருத்தங்கள் இருந்தால், அதை மேற்கொள்ள, பின்னர் வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!