டாக்டர் குடும்பம் தற்கொலை
சண்டிகர்:ஹரியானா மாநிலம் ரோஹ்தக் நகரின் ஒரு வீட்டில் டாக்டர் குடும்பமே இறந்து கிடந்தது.
ஹரியானாவின் ரோஹ்தக் நகரின் பார்ஷி நகரில் நேற்று முன் தினம், குடும்பமே இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
ரோஹ்தக் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேஷ்ராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு வசித்த டாக்டர் வினோத், 32, அவரது மனைவி சோனியா, 30, மற்றும் எட்டு வயது மகள், ஆறு வயது மகன் ஆகியோர் இறந்து கிடந்தனர்.
மனைவி, குழந்தைகள் கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தனர். வினோத் உடல் அருகே 'சிரிஞ்ச்', துாக்க மாத்திரைகள் மற்றும் மது பாட்டில் ஆகியவை இருந்தன.
மூவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, வினோத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடல்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!