மதிய உணவு சாப்பிட்ட மாணவியருக்கு வாந்தி
புதுடில்லி:புதுடில்லி அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் மாணவியர் வீடு திரும்பினர்.
புதுடில்லி ஜில்மில் காலனியில் உள்ள பெண்கள் பள்ளியில் நேற்று மதியம், பள்ளியில் தயாரித்த உணவை சாப்பிட்ட மாணவியர் வாந்தி எடுத்து மயங்கினர்.
பாதிக்கப்பட்ட மாணவியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். கவனக்குறைவாக உணவு தயாரித்த சமையலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் அஜய்வீர் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!