Load Image
Advertisement

சட்டவிரோதமாக நடத்திய மருத்துவமனைக்கு சீல்

குருகிராம்:ஹரியானா மாநில முதல்வரின் பறக்கும் படை மற்றும் சுகாதாரத் துறை கூட்டுக் குழு ஆகியவை இணைந்து, சிர்ஹவுல் நகரில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையில் சோதனை நடத்தி, 'சீல்' வைத்தது.

இதுகுறித்து, முதல்வரின் பறக்கும் படை அதிகாரி கூறியதாவது:

ஹரியானாவின் குருகிராம் நகரின் 18வது செக்டாரில் உள்ள சிர்ஹுவல் கிராமத்தில், 'சன் ஷைன் மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை சட்டவிரோதமாக நடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, முதல்வரின் பறக்கும் படை மற்றும் சுகாதாரத் துறை கூட்டுக் குழு ஆகியவை அந்த மருத்துவமனையில் அதிரடி சோதனை நடத்தியது.

அரசிடம் பதிவு செய்யாமல் அந்த மருத்துவமனை நடத்தப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையை நடத்திய ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டம் தாதுகா கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் சைனி மருத்துவம் படித்ததற்கான சான்றுகளும் இல்லை.

அலோபதி மருந்துகள், நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தஆவணங்கள், மருத்துவர்களின் போலி முத்திரைகள் கைப்பற்றப்பட்டன. அந்த மருத்துவமனைக்கு உடனடியாக 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் மின்சாரமும் திருடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத் துறை அளித்த புகார்படி, 18வது செக்டார் போலீசார் மனோஜ்குமார் சைனி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement