கவர்னர் மாளிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் கெஜ்ரிவால்
புதுடில்லி:குடியரசு தினத்தை முன்னிட்டு, ராஜ்பவனில் நடந்த 'அட் ஹோம்' என்ற நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜ்பவனில் கவர்னர் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் 'அட் ஹோம்' என்ற தேநீர் விருந்து நடத்தப்படும். கொரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக இது நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று முன் தினம் மாலை நடந்தது. கவர்னரின் அழைப்பை ஏற்று, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.
அவரை கவர்னர் வி.கே.சக்சேனா, அவரது மனைவி சங்கீதா சக்சேனா ஆகியோர் வரவேற்றனர்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் கே.சி.தியாகி, பா.ஜ., - எம்.பி.,க்கள் மனோஜ் திவாரி, பர்வேஷ் வர்மா, ரமேஷ் பிதுரி, கவுதம் கம்பீர் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதி ஆகியோரும் பங்கேற்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள், டில்லியைச் சேர்ந்த பத்ம விருது பெற்றவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளின் மாணவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மாநகர போலீஸ் மற்றும்தீயணைப்புப் படையில் தியாகம் செய்தோரின் குடும்பத்தினர், விளையாட்டு வீரர்கள், பாராலிம்பியன்கள், தூய்மைப் பணியாளர்கள், மதத் தலைவர்கள், மாநில அரசின் மூத்த அதிகாரிகளும் வந்திருந்தனர்.
நஜாப்கர் வடிகால் சுத்தம் செய்தல், மாநகராடி குப்பைக் கிடங்கு மற்றும் யமுனை வெள்ளப்பகுதிகளுக்கு புத்துயிர் அளிக்கும் வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகள், வெளிநாட்டுப்பிரதிநிதிகள், கல்வியாளர்கள், டாக்டர்கள், துணைவேந்தர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.
மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும்சூழலில், இந்நிகழ்ச்சியில் முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்று கவர்னர்சக்சேனாவும் மனம் விட்டு பேசியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!