அரசு வீடு ஒதுக்கீட்டில் தகராறு துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
அசம்கர்:உத்தரப் பிரதேசத்தில் அரசு வீடுகள் ஒதுக்கீட்டின்போது ஏற்பட்ட தகராறில்ஒருவருக்கொருவர் துப்பாக்கியால் சுட்டதில், ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார். காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உ.பி., மாநிலம், மெஹ்னாஜ்பூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு வீடுகள் ஒதுக்கீடு நேற்று முன் தினம் நடந்தது.
அப்போது இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.
இதில், ஹிமான்ஷூ,32 என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார். காயம் அடைந்த பீம்சிங் மற்றும்முன்னா சிங் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மெஹ்னாஜ்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் உசாகீர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!