ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.100 கோடி உரம் தேக்கம்
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு உரம் விற்பனை ஆகாமல் தனியார் கடைகளில் மட்டும் ரூ. 100 கோடி மதிப்பிலான உரம் தேக்கமடைந்துள்ளது.
இம்மாவட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி துவங்கியது. பயிர்களுக்கு டி.ஏ.பி., மற்றும் காம்ப்ளக்ஸ் உரத்தை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். பயிர்கள் செழித்து வளர தழை சத்திற்காக யூரியா உரமும், மணிசத்து தேவைக்காக பொட்டாஷ் உரமும் அதிக அளவில் பயன்படுத்தப்படும்.
வடகிழக்கு பருவ மழையை நம்பி விற்பனைக்காக தனியார் உரக்கடைகளில் பல நுாறு டன் உரம் வைக்கப்பட்டது. பருவ மழை ஏமாற்றி ஏற்பட்ட வறட்சியால் நெற்பயிர்கள் கருகியதால் ரூ.100 கோடி மதிப்பிலான உரம் தேக்கமடைந்துள்ளது.
உர வியாபாரிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கலீல் கூறுகையில், மாவட்டத்தில் 122 உர வியாபாரிகள் உள்ளனர். யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளன. கடந்த ஆண்டை போல் உரம் விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் பல நுாறு டன் உரங்களை கொள்முதல் செய்தோம்.
ஆனால் குறைந்த அளவே விற்பனையாகியுள்ளது. இதனால் 80 முதல் 100 கோடி ரூபாய் மதிப்பிலான உரம் தேக்கமடைந்துஉள்ளது. இந்த உரத்தை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதி இல்லை.
எனவே இருப்பில் வைத்து வரும் ஆண்டில் தான் விற்பனை செய்ய முடியும். இதனால் வியாபாரிகள் நஷ்டம் அடையலாம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!