பிப்ரவரி முதல் மார்ச் வரை இரவிகுளம் தேசிய பூங்கா மூடல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
மூணாறு:மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகளின் பிரசவம் துவங்கியதால் பிப். 1 முதல் மார்ச் 31 வரை பூங்கா மூடப்படுகிறது.
இங்கு அபூர்வ இன வரையாடு ஏராளமாக உள்ளன. அவற்றைக் காண பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கின்றனர். ஆண்டுதோறும் வரையாடுகளின் பிரசவ காலமான பிப்ரவரி மார்சில் பூங்கா மூடப்பட்டு ராஜமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும்.
தற்போது வரையாடுகளின் பிரசவம் துவங்கியதால் பூங்காவை மூட தலைமை வன விலங்கு பாதுகாவலர் கங்காசிங் உத்தரவிட்டார். அதன்படி பிப். 1 முதல் மார்ச் 31 வரை பூங்கா மூடப்பட்டு ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மூணாறு வன உயிரின பாதுகாவலர் வினோத் தெரிவித்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!