விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே, லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற, ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் உட்பட, மூன்று பேர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன், மணிகண்டன், 27; மகள்கள் லாவண்யா, 25, இந்துமதி, 21.
மணிகண்டன், காவேரிப்பட்டணத்தில் இரும்பு கடை வைத்து நடத்தி வந்தார். லாவண்யா, கிருஷ்ணகிரியிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்துமதி, கல்லுாரி படிப்பை முடித்து, வீட்டில் இருந்தார்.
லாவண்யாவுக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்கவிருந்தது.
இந்நிலையில், அவரது பல் தொடர்பான பிரச்னைக்காக, தர்மபுரியிலுள்ள பல் டாக்டரை பார்க்க, மணிகண்டன் தன் 'சூசுகி அக்சஸ்' ஸ்கூட்டரில், நேற்று லாவண்யா, இந்துமதி ஆகியோரை அழைத்துச் சென்றார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி வழியாக நேற்று மாலை, 6:00 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.
பெரியாம்பட்டி சமத்துவபுரம் அருகே மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கும்போது, சாலையில் நிறுத்தியிருந்த லாரியை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, மஹாராஷ்டிராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு வெங்காய பாரம் ஏற்றிச்சென்ற லாரி, மணிகண்டன் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரின் மீது மோதியது.
இதில், லாரியின் இடிபாட்டில் சிக்கிய, மணிகண்டன், லாவண்யா, இந்துமதி ஆகிய மூவரும், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!