ஆசிரியருக்கு வெட்டு பாசக்கார அண்ணன் கைது
விழுப்புரம்:நிலப்பிரச்னை காரணமாக, அரசு பள்ளி வளாகத்தில் புகுந்து ஆசிரியரை அரிவாளால் வெட்டிய அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம்,கோடங்குடியைச் சேர்ந்தவர் நடராஜன், 42; விழுப்புரம் மாவட்டம்,கோலியனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், நேற்று மதியம், 1:00 மணியளவில் பள்ளியின் நுழைவாயில் அருகே நின்றிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அவரது அண்ணன் ஸ்டாலின், 52; திடீரென கத்தியால் நடராஜனின் கை மற்றும் முதுகில் வெட்டினார்.
இதைக்கண்ட பிளஸ் 1 மாணவர்கள் மனோஜ், ஆகாஷ், முருகன் ஆகியோர் தடுத்தபோது, கை விரல்களில் லேசான காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த நடராஜன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், மனோஜ் உள்ளிட்ட மூன்று பேரை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஸ்டாலினை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
அதில், சகோதரர்கள் இடையே நிலப்பிரச்னை உள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நடராஜனை, கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. போலீசார் வழக்குப் பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.
பள்ளி வளாகத்தில் ஆசிரியரை, அவரது சகோதரர் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!